பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நெற்றியில் அன்பான முத்தங்கள்! பிரபல இயக்குனர் செய்த காரியத்தால் நெகிந்துபோய் நன்றி கூறிய மிஷ்கின்!
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் மிஷ்கின். அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் மிஷ்கின் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவர் தான் அடுத்ததாக இயக்கவிருக்கும் பிசாசு 2 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தை ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா @bstudios_offl . 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன். pic.twitter.com/WcmdMVotJX
— Mysskin (@DirectorMysskin) September 21, 2020
அதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்குனர் பாலா தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான பிசாசு பட டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. பிசாசு 2 இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.