உங்க வீட்டுல ஆரம்பிங்க - பேட் கேர்ள் விவகாரத்தில், பா. ரஞ்சித்தை குறிப்பிட்டு மோகன் ஜி எதிர்ப்பு..! காரணம் என்ன?



  Mohan G on Bad Girl Teaser Reply on Pa Ranjith Tweet 

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கத்தில், இன்றைய தலைமுறையின் இளம் வயதில் ஏற்படும் சமூக ரீதியிலான தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பெண்ணின் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றம் தொடர்பான கதையை காலமாக கொண்டது பேட் கேர்ள் (Bad Girl).

டீசர் வெளியானது

அமித் திரிவேதி இசையில், ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவில், ராதா ஸ்ரீதர் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன், ஷாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டீஜெய் அருணாச்சலம், ஹரிந்து ஹாரூன், சஷாங்க் பொம்மிரெட்டிபள்ளி உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் டீசர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகின.

இதையும் படிங்க: பழனி வரும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பாதையாத்திரை பாடல் நாளை வெளியீடு.!

மோகன் ஜி எதிர்ப்பு

இந்நிலையில், இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சில சர்ச்சைகளை கொண்டுள்ளதாக விமர்சித்து இருக்கும் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது உங்களுக்கு எப்போதும் ஒரு தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாகும். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோவிடமிருந்து இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?.

பிராமண அப்பா அம்மாவை திட்டுவது வயதானது, ட்ரெண்டி அல்ல.. உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தினரிடம் அதைக் காட்டுங்கள்" என கூறியுள்ளார். மோகன் ஜியின் ட்விட் பதிவில் ஆதரவும், எதிர்ப்பும் என கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

பேட் கேர்ள் டீசரை கீழுள்ள இணைப்பில் காணவும்

இதையும் படிங்க: பாலாஜி முருகதாஸின் பயர் படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விரைவில் ட்ரைலர்.. படக்குழு தகவல்.!