மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'ஜாதி இருக்கு.. ஆனா, எனக்கு அது தேவையில்ல.' திரௌபதி இயக்குனர் மோகன்.!
2016 ஆம் ஆண்டு மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. மேலும் இவர் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் சில குறிப்பிட்ட ஜாதியினரை வைத்து எடுக்கப்பட்டதாக திரை விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதியான இன்று வெளியாகிறது. இந்த படத்தில் செல்வராகவன், நடராஜன் சுப்பிரமணியன், ராதாரவி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆன்லைன் பாலியல் மோசடிகளை வைத்து எடுத்துள்ள பகாசூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை உருவாக்கியது.
பகாசூரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மோகன்ஜி நான் இயக்குனர் செல்வராகவன் அவரை பார்த்து தான் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தேன். ஒரு குறிப்பிட்ட ஜாதியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் படம் எடுக்கவில்லை என்றார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ருத்ர தாண்டவம் படம் குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிராக தானே எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மோகன் ஜி ஜாதிய பிரச்சனைகளை இதில் எழுப்பாதீர்கள் என்று கோபத்துடன் பதில் அளித்தது பத்திரிக்கையார்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவர் கூறியதாவது, "நான் சமூகப் பொறுப்புள்ள படங்களை இயக்கவே ஆசைப்படுகிறேன். இதன் பிறகு அத்தகைய படங்களே வரும். திரௌபதி சமுதாயத்தில் நடந்த உண்மை சம்பவம் அதையே படமாக எடுத்துள்ளேன்." என்றும் கூறினார். ஜாதி உள்ளதா என்று கேட்டால் கண்டிப்பாக உள்ளது. ஆனால் எனக்கு தேவையில்லாதது என்றார். இட ஒதுக்கீடு பற்றி வெற்றிமாறன் பேசிய போது அனைவரும் பாராட்டினார்கள். அதுவே நான் பேசினால் வேறு விதமாக மக்களை சென்றடைகிறது என்று கூறினார்.