மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'தல' எம்எஸ் தோனியின் LGM திரைப்படம்... செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சினிமா துறையில் கால் பதித்திருக்கிறார். தோனி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலமாக இவர் தமிழ் மொழியில் தயாரிக்கும் படம் "லெட்ஸ் கெட் மேரிட்". இந்தத் திரைப்படத்தை பல விளம்பர படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, இவானா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். காதல், கலாட்டா, காமெடி என ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் படக்குனு இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. அந்தப் போஸ்டரில் ஒரு பேருந்து நடுவே ஹரிஷ் கல்யாண் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி மற்ற கதாபாத்திரங்கள் நிற்பது போல புகைப்படத்துடன் வெளியாகியிருக்கிறது இந்த போஸ்டர்.
Presenting the second look poster of #LGM! Get ready to join us on this fun journey. #LGM படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வழங்குகிறோம்! இந்த வேடிக்கையான பயணத்தில் எங்களுடன் சேர தயாராகுங்கள்! pic.twitter.com/nR2UydHcWp
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) May 27, 2023
இந்த போஸ்டருக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் கதை தான் என்ன என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. சென்னையை தனது இரண்டாவது தாய் வீடாக கூறும் தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தையே தமிழ் மொழியில் எடுத்து தமிழக மக்கள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டியிருக்கிறார்.