#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் இப்படியெல்லாம் பேசுவாருனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! நெகிழும் இம்மான்!
தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர் இம்மான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இசை அமைப்பாளராக அறிமுகமாகியிருந்தாலும் மைனா திரைப்படம் அவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து கும்கி படமும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதில் இருந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்தார் D இம்மான்.
இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கும் இம்மான் தான் இசை அமைப்பாளர். விஸ்வாசம் படத்தின் பாடல்களும் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பா கண்ணான கண்ணே பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்நிலையில் தல அஜித் தனக்கு போன் செய்து தன்னை பற்றி புகழ்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இம்மான். விஸ்வாசம் படத்தின் பாடல்களை அஜித் சாருக்கு அனுப்பினோம், அதை கேட்டுவிட்டு இரவு 10 மணிக்கு அஜித் சார் எனக்கு போன் செய்து, எனக்கு என்ன சொல்றது என்றே தெரியவில்லை, கண்ணான கண்ணே பாடல் எனது வாழ்வில் மறக்க முடியாத பாடலாக அமையும் என்று கூறினார்.
இந்தளவிற்கு அஜித் சார் என்னை பாராட்டி பேசுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என இமான் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்