திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தல தலதான்யா! செல்பி எடுக்க சென்ற பிரபல இசை அமைப்பாளர்! யாரென்றே தெரியாமல் தல செய்த காரியம்!
தல என்றாலே மிகவும் பொறுமையானவர், அமைதியானவர் என கேள்விப்பட்டிருப்போம். முகம் தெரியாத எத்தனையோ நபர்களுடன் தல செல்பி எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தல அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை அஜித் சாரை ஏர்போர்ட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள நானும் ஏன் மனைவியும் சென்றோம். அப்போது அவருக்கு நான் யார் என்று தெரிய வில்லை. நான் யார் என்று தெரியாமளையே எனது கைய பிடித்துக்கொண்டு 5 நிமிடங்கள் வரை செல்பி எடுத்துக்கொண்டார்.
பின்பு என்னிடம் என்ன செய்ரீங்க என்று கேட்டதும், நான் மியூசிக் டேரக்டரா இருக்கேன் என்று சொன்னேன். அதற்கு அவர், அப்படியா நல்லா பண்ணுங்க பெரிய ஆளா வரணும் என்று சொன்னார். பின்னர் எனது மனைவிதான் என்னைப்பற்றி அஜித் சாரிடம் சொன்னார். பின்னர் என்னை தனியாக அழைத்து ரொம்பா சாரிங்க உங்களை தெரியவில்லை என்று சொன்னார்.
அதே போல அவரிடம் புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கூட மிகவும் கனிவாக வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கலாம் என்று சொன்னார். அவர் இவ்வளவு தன்மையாக பேச வேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால், அனைவரிடமும் அவர் மிகவும் கனிவாக தான் பேசினார்.