வாவ்! நாடோடிகள் படநடிகையா இது! ஆள் அடையாளமே தெரியலையே! இணையத்தையே கலக்கும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தில், சசிகுமாருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இவர் இயற்கையிலேயே வாய் பேச சிரமப்படுவர். அதுமட்டுமல்லாமல் கேட்கும் திறனும் குறைவு. இருப்பினும் அவர் தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டியிழுத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் சம்போ சிவசம்போ, ஈசன், ஆயிரத்தில் ஒருவன், குற்றம்23, வீரம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இதுவரை இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் அபிநயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அபிநயா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் செம மாடர்னாக அழகாக போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.