பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இயக்குனர் சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை! யார்னு பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 26ஆம் தேதி விஜயதசமி அன்று படக்குழு வெளியிடுகிறது. இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று சிம்பு டுவிட்டரில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து முதல் முறையாக அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா போன்ற படங்களில் நடித்த நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.