15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்பாவான நடிகர் நரேன்.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!



Naren blessed with boy baby after 15 years

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நரேன். அவர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை, கைதி என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் நரேன் கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு தன்மியா என்ற மகள் உள்ளார். அவருக்கு 14 வயது ஆகிறது. இந்த நிலையில் திருமணமாகி 15 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் நரேன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர்களுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.