#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாகுபலி வெப்தொடரில் களமிறங்கும் நடிகை நயன்தாரா! அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா? செம சர்ப்ரைஸான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு ஹீரோக்களுக்கு நிகராக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அண்ணாத்த போன்ற படங்கள் உள்ளன. இந்த நிலையில் நயன்தாரா தற்போது வெப்தொடராக உருவாகும் பாகுபலியில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி உலகளவில் அனைவரையும் பிரமிக்க வைத்த திரைப்படம் பாகுபலி. இதன் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்தது. மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுதீப், தமனா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பாகுபலி வெப்தொடராக உருவாக உள்ளது. அதாவது பாகுபலி முதல் பாகத்திற்கு முன் நடந்தது, சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை தொடராக எடுக்கவுள்ளனர். இந்த வெப்தொடரில் நடிகை நயன்தாரா இளவயது ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்படவுள்ளது.