திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விக்னேஷ் சிவனை பிரியும் நயன்தாரா.? விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.! ரசிகர்களுக்கு ஏக குஷி.!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவரது காதல் வாழ்க்கை முதல் திருமணம் குழந்தைகள் என்று அனைத்தும் பலராலும் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டு வந்தன. தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதுடன், பலவிதமான தொழில்களிலும் காலூன்றி முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
சமூக ஊடகங்களில் பல வருடங்களாக தலை காட்டாத இவர், சமீப காலத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கினார். தொடங்கிய சில தினங்களிலேயே அவரது பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தொட்டது. சமீப காலமாக அவர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக கிசுகிசு வெளியாகி வந்தது.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் தொலைந்து விட்டதாக (I am Lost) நேற்று முன் தினம் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவரது விவாகரத்து செய்தி உண்மை என்று கூறி பல கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நயன்தாரா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விமான பயணம் செய்வதை புகைப்படமாக பதிவேற்றியுள்ளார். "Travelling with my boys after so long" என்று வாசகம் ஒன்று எழுதி அதில் தனது கணவர் விக்னேஷ் சிவனையும் டேக் செய்திருந்தார். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படத்தை பதிவேற்றி, தன்னை பற்றி அவதூறு பரப்பும் வாய்களை அடைத்துள்ளார் நயன்தாரா.