திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒருவேளை அப்படி இருக்குமோ.. தீயாய் பரவிய வதந்தி..! ஒரே போட்டோவால் என்ட் கார்டு போட்ட நயன்தாரா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர். நடிகை நயன்தாரா பிசினஸிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா தனது தொழில் சம்பந்தமான, கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் umm.. I'm lost என பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனரா எனவும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் பிளைட்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
— Nayanthara✨ (@NayantharaU) March 7, 2024