மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்! முதன்முறையாக தங்களது இரட்டை குழந்தைகளுடன் வெளியே வந்த நயன், விக்கி.! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் திருமணமான நான்காவது மாதத்திலேயே இருவரும் பெற்றோர்களாவதாக அறிவித்தனர். மேலும் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. இதனால் பல சர்ச்சைகளும் கிளம்பிய நிலையில் தக்க ஆதாரங்களுடன் அவற்றிற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி வைத்தனர்.
நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் கைகளில் தங்களது குழந்தைகளை இறுக்க அணைத்தப்படி வந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.