#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது காதலனுடன் ஜோடியாக நயன்தாரா எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .
நயன்தாரா பல சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார். மேலும் தீபாவளியை முன்னிட்டும் அவரது நடிப்பில் பிகில் திரைப்படம் வெளிவரவில்லை.
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார். அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இருவரும் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். அப்பொழுது எடுக்கபட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.