மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏம்மா.. தனுஷை பார்த்தா எப்படி தெரியுது? டிடியின் ஒற்றை கேள்வியால் பொங்கியெழுந்த நெட்டிசன்கள்!!
ஹாலிவுட் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தி கிரே மேன். இந்தப் படத்தை ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். தி கிரே மேன் படம் ஜூலை 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்துள்ள மாஸ் ஆக்சன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தனுஷ் கலந்துகொண்டார். அப்பொழுது அவரிடம் தி கிரே மேன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அது தனக்கே தெரியவில்லை என காமெடியாக கூறினார். அதனைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அதனை பகிர்ந்த தொகுப்பாளினி டிடி இதை பார்க்கும்போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது என்பதை விவரிக்க முடியவில்லை தனுஷ் சார். அமெரிக்காவில் மாஸ் பண்றீங்க. பின்குறிப்பு- ஒரு சீட் தள்ளி இருக்கிற அந்த ப்ரிட்ஜெர்டன் ஹீரோ வாட்ஸ்ஆப் நம்பர் கிடைக்குமா? என கிண்டலாக கேட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் தனுஷ் பக்கத்தில் இருக்கும் அந்த பொண்ணோட நம்பர் கிடைக்குமா?, ஏம்மா டிடி, அடங்கவே மாட்டீங்களா? தனுஷ் அண்ணாவை பார்த்தால் எப்படி தெரிகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.