#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார் பிரச்னையை விடுங்கப்பா. தல ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துருக்கு! அத பாருங்க.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சர்க்கார். படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்களே இன்னும் மறக்கமுடியாத நிலையில் இருக்கும்போது சர்க்கார் பாடம் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எங்கு பார்த்தாலும் சர்க்கார் சர்க்கார் என போய்க்கொண்டிருக்க தல ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது விசுவாசம் படக்குழு.
இயக்குனர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார் தல அஜித். இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது, இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள்.