திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!" தீயாய் பரவும் புகைப்படங்கள்..
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். இவர் 2018ஆம் ஆண்டு தெலுங்கில் "சவ்யசாச்சி" என்ற படத்திலும், தமிழில் 2021ம் ஆண்டு "பூமி" என்ற படத்திலும் அறிமுகமானார். தொடர்ந்து சிம்புவின் "ஈஸ்வரன்" படத்திலும் நடித்துள்ளார்.
இதையடுத்து 2019ம் ஆண்டு ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற படத்திலும், மேலும் 2022ம் ஆண்டு கலகத் தலைவன் படத்திலும் நடித்துள்ளார். மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஹிந்தியில் 2017ஆம் ஆண்டு வெளியான "முன்னா மைக்கேல்" என்ற படத்தில் முதலில் அறிமுகமானார்.
தொடர்ந்து வரிசையாக தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் நிதி அகர்வாலும், சிம்புவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து சிம்புவோ, நிதி அகர்வாலோ எந்த பதிலும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், எப்போதாவது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.