மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்கவுள்ள புதிய நடிகை..! யாருன்னு பார்தீங்களா..இனி கதை வேற லெவல் தான்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இந்தத் தொடரில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதில் மாயன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மகா என்ற ரோலில் நடிகை ரச்சிதா நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவர் சில காரணங்களால் தொடரலிருந்து வெளியேறிய நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் தற்போது இந்த சீரியலில் புதிய காதாபாத்திரத்தில் பவித்ரா என்பவர் நடிக்க உள்ளாராம். இதில் மாயன், மாறன் என இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாறனுக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி இந்த சீரியலின் கதை மற்றும் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என பார்ப்போம்.