ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குழந்தை பிறந்ததும் நிஷா கணேஷ் எப்படி ஆகிட்டார் பாருங்க! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.
இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன் தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டார். மேலும் இறுதி நிலை வரைக்கும் சென்ற அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். நிஷா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதாரணமாக மிக அழகிய காதல் ஜோடியினராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கணேஷ் நிஷா கர்ப்பமாக இருந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நிஷாவிற்கு சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்தது. அதனை கணேஷ் வெங்கட்ராமன் மிகுந்த உற்சாகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் அதனை தொடர்ந்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினையம் கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.