மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த பேச்சுக்கே இடமில்லை! முதன்முதலாக தனது காதல் தோல்வி குறித்த ரகசியத்தை உடைத்த நடிகை நித்யா மேனன்!
தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். பப்லியான தோற்றத்தில் இருக்கும் அவர் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய்யின் மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2, துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி மற்றும் சைக்கோ திரைப்படங்களில் இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.
மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி ஐயன் லேடி படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்த நித்யா மேனன் தற்போது மெலிந்துள்ளார். அத்தகைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு திறமையான சிறந்த நடிகையாக விளங்கி வரும் நித்யா மேனன் 32 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த நித்யா மேனன் தனது காதல் அனுபவம் குறித்து பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் எனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் யாருக்காகவும் நான் என்னை மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது. எனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் நான் ஆசைப்படுகிறேன் என அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.