பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தியேட்டரில் படம் போடுவதற்கு முன் வரும் புகைப்பிடித்தல் விளம்பரத்தில் நடித்த பாப்பாவா இது! இப்படி வளர்ந்துட்டாரே! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!
சினிமாக்களில். மற்றும் பிரபல விளம்பரங்களில் நடித்து வந்த பல குழந்தைகள் தற்போது நன்று வளர்ந்து அவர்களா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு அடையாளமே தெரியாமல் மாறியுள்ளனர். அவ்வாறு திரையரங்குகளில் திரைப்படம் போடுவதற்கு முன்பாக மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புகைபிடித்தல் தொடர்பான விளம்பரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிம்ரன் நட்டிகர்.
மும்பையை சேர்ந்த அவர் தனது ஏழு வயதில் அந்த விளம்பரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்ரன் நட்டிகர் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் அது மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார்.மேலும் அவர் இறுதியாக 2019ஆம் ஆண்டு வெளியான கேர்ள்ஸ் ஹாஸ்டல் என்ற தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அனைவர் மத்தியிலும் பிரபலமாகி தற்போது இளம் பெண்ணாக வளர்ந்து நிற்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.