மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது என்ன புதுமாடலா இருக்கு! இப்படியொரு மாஸ்க் இதுவரைக்கும் யாரும் போட்ருக்கமாட்டாங்க!! வேற லெவல் புகைப்படம்!!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு, மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கபடுகிறது. அதற்கு பயந்தே பலரும் வெளியே செல்லும் போது
மாஸ்க் அணிந்து செல்கின்றனர். இந்தநிலையில் தெலுங்கானாவில் முதியவர் ஒருவர் அபராதத்திற்கு பயந்து குருவி கூட்டை மாஸ்க் போல அணிந்து வந்த சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மக்புப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேகலா குர்மய்யா. இந்த முதியவர் தனது ஓய்வூதிய தொகையை வாங்க, மண்டல ஓய்வூதிய அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் மாஸ்க் அணியவில்லை என்றால் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என தெரிய வந்த நிலையில் அந்த முதியவர் பறவைக்கூட்டை மாஸ்க் போல மாற்றி அணிந்துகொண்டு வந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,