மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த விஷயத்தைப் பற்றி பேசினால் எனக்கு ரொம்ப கோபம் வரும்" ப்ரியா பவானி சங்கரின் மனம் திறந்த பேச்சு..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் தமிழில் முதன் முதலில் 'மேயாத மான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே இவருக்கு மிகப்பெரும் பெயர் பெற்று தந்தது.
ஆரம்ப காலகட்டத்தில் சின்ன திரையில் சீரியலில் நடித்து பின்பு தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் பிரியா பவானி சங்கர். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அப்புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் உங்கள் உள்ளாடை சைஸ் என்ன என்று கேள்வி கேட்டார். இதற்கு ப்ரியா பவானி சங்கர் திட்டி பதிலடி கொடுத்தார்.
இதனை சமீபத்தில் பிரியா பவானி சங்கர் கலந்து கொண்ட பேட்டியில் தொகுப்பாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் எனக்கு உள்ளாடை சைஸ் என்ன என்று கேட்டால் மிகவும் கோபம் வரும். எல்லாத்தையும் கடந்து விடுவேன். ஆனால் எனக்காக நான் தானே பேசணும் என்று கூறியிருக்கிறார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.