#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ட்விட்டரில் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப புகைப்படங்களை பதிவிட்டு குஷிபடுத்திய ஓவியா!
தமிழில் வெளியான களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஓவியா. களவாணி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஓவியாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன அதனை தொடர்ந்து கலகலப்பு, மெரினா போன்ற படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை ஓவியா மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்த பலவிதமான சம்பவங்களால் நாளுக்கு நாள் ஓவியாவின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே போனார்கள். ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் ஓவியவிருக்கு ஆர்மி தொடங்கும் அளவிற்கு பிரபலமானார் நடிகை ஓவியா.
அன்று முதல் இன்று வரை ஓவியாவிற்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டு தான் உள்ளது. இதற்கு காரணம் அவர் ரசிகர்களுக்கு பதிலளிப்பதும், அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதும் தான்.
அந்தவகையில் இன்று தன் ரசிகர்களுடன் உறையாடிய ஓவியா, அவர்களின் விருப்பத்திற்கேற்ப சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதனால் ஓவியா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
For u pic.twitter.com/9je5VVz5S9
— Oviyaa (@OviyaaSweetz) November 15, 2018