#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பழத்தை சாப்பிடாமல் விதையை விமர்சிக்க வேண்டாம்" ட்ரெய்லர் குறித்து ஓவியா பதில்
தணிக்கை குழுவால் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள 90ml படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஓவியா நடித்துள்ள இந்த படத்தினை அனிதா உதீப் இயக்கியுள்ளார்.
ஓவியா வெளிப்படையாக பேசக்கூடியவர், குழந்தைதனம் கொண்டவர் என்பதால் தான் பலர் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மியெல்லாம் துவங்கினர். ஆனால் இன்று வெளியாகியுள்ள 90ml ட்ரெய்லரை பார்த்த சிலர், ஓவியாவின் ரசிகன் என்று சொல்வதற்கு நா கூசுகிறது என்று புலம்புகின்றனர். வெளிப்படையாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு வெளிப்படையாக இருக்கலாமா என கதறுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் ஓவியா. அதில், பழத்தை சாப்பிடுவதற்கு முன்பே விதையை பற்றி முடிவு செய்ய வேண்டாம். சென்சார் செய்யப்பட்ட 90ml படம் வெளியாகும் வரை காத்திருங்கள். இப்போதைக்கு ட்ரெய்லரை மட்டும் பார்த்து ரசிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.
Hey guys👋
— Oviyaa (@OviyaaSweetz) February 9, 2019
pls dnt judge a seed before tasting the fruit👆
Wait for the main film #90ml which is Censored🤞
Now enjoy this adult #90MLTrailer:https://t.co/TTNus3Gnrm@Anitaudeep#STR