மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'சமூக நீதிக் கட்சியில் கூட ஏற்றத்தாழ்வு!' யாரை குறிப்பிடுகிறார் பா.ரஞ்சித்.?! மாமன்னன் பற்றிய ட்வீட் வைரல்.!
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இதற்கு முன்பாக நிறைய படங்களில் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஓரிரு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதில், வைகைப்புயல் வடிவேலு மற்றும் நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியது. படம் வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்திற்கு அரசியல்வாதிகள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.…
— pa.ranjith (@beemji) July 3, 2023
இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். மாமன்னன் திரைப்படத்தின் கதைக்களத்தை பாராட்டிய அவர் மாரி செல்வராஜின் இயக்கம் மற்றும் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் திறமை பற்றி மனதார பாராட்டி இருக்கின்றார்.