மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.. மிகுந்த மன வருத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அம்மா! ஏன் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். உறவுகள் மற்றும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் கடந்த ஒரு வாரமாக உணர்வுபூர்வமான சோகமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது இத்தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலா திடீர் மரணம் அடைவது போன்றும், அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறுவது போன்ற எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது. இதில் உண்மையாக ஒருவர் இறந்தால் எப்படி சடங்குகள் நடைபெறுமோ அனைத்தும் பின்பற்றுவது போன்று சீரியலில் காண்பிக்கப்பட்டது.
இதுகுறித்து நடிகை ஷீலா கூறுகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதல் நாள் தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். இறந்துபோவது போன்ற காட்சிகளில் நடித்ததிலெல்லாம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல ஹிட்டாகி ஒளிபரப்பாகி வரும் தொடரிலிருந்து பாதியிலேயே விலகுகிறோம் என்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மேலும் கடைசி நாள் காட்சியில் நடிக்கும்போது வெயில், அதிக கூட்டம் இருந்தது கொஞ்சம் சிரமமாக இருந்தது என கூறியுள்ளார்.