#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களின் மனதை வென்ற ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம்: ஹாட்ஸ்டாரில் வெளியீடு.!
கடந்த 1 டிசம்பர் 2023 அன்று ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா, ராம ராஜேந்திரா, இளவரசு உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பார்க்கிங்.
இப்படம் பேஷன் ஸ்டுடியோஸ் - சோல்ஜர்ஸ் கம்பெனி தயாரிப்பில், சாம் சி.எஸ் இசையில் உருவாகி இருந்தது. படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடியது.
Parking is Available for Everyone 🚘#Parking Streaming Now on @DisneyPlusHS @iamharishkalyan @Actress_Indhuja @sinish_s @Sudhans2017 @ImRamkumar_B @Synccinema pic.twitter.com/9W8Ku0rdhv
— Soldiers Factory (@SoldiersFactory) December 31, 2023
இதனால் படத்தின் இயக்குனருக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் வெற்றி விழாவின் போது தங்க மோதிரத்தையும் பரிசளித்து இருந்தார். இந்நிலையில், படம் ஹாட்ஸ்டார் செயலியில் வெளியாகியுள்ளது. அனைவரும் பார்க்கும் வகையில் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பதிவேற்றப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.