மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈரமான ரோஜாவே நடிகை பவித்ராவின் காதலர் இவர்தானா! அவரே வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்கள் ஏராளம். அவ்வாறு மக்களை கவர்ந்த தொடர்களுள் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்தத் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் பவித்ரா. இத்தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
மேலும் பவித்ராவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில் அவர் தற்போது விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.
இதற்கிடையில் பவித்ராவிடம் ரசிகர்கள் உங்களது காதலர் யார் என கேட்டுள்ளனர் போல. திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது காதலர் யார் என தெரிந்துகொள்ள ஒரு நேரத்தை தெரிவித்து அப்போது வாருங்கள் என கூறியுள்ளார். பின்னர் கிராபிக்ஸ் பொம்மையுடன் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு அவர்தான் தனது காதலர் என கூறி அதனுடன் விளையாடியுள்ளார்.