மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சைக்கோ திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை என்னுடைய டூப் தான் நடித்தது" உண்மையை போட்டுடைத்த உதயநிதி.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்துக் கொண்டு வருகிறார். பல ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.
மேலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதன் முதலில் விஜய் நடித்த 'குருவி' திரைப்படத்தை தயாரித்தார். இதன் பிறகு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் உதயநிதி.
தற்போது உதயநிதி அரசியலில் ஈடுபட்டு வருவதால் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். எனவே இவரின் கடைசி படமான 'மாமன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு திரையில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட உதயநிதி 'சைக்கோ' திரைப்படத்தை குறித்து பேசி உள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தை தொகுப்பாளர் கேட்டபோது, "இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை. பெரும்பாலான காட்சிகள் என்னுடைய டூப் தான் நடித்தார். நான் அரசியலில் பிஸியாகி விட்டேன்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று ஆதங்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.