பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உருவாகிறது பிசாசு 2! நள்ளிரவு 12 மணிக்கு வெளியான அறிவிப்பு! ஹீரோயின் யார் தெரியுமா?
கடந்த 2014ஆம் ஆண்டு பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிசாசு. இப்படத்தில் நாகா , பிரயாகா மார்டின், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். திகில் கலந்த பேய் படமான பிசாசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது பிசாசு 2 திரைப்படம் தயாராக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிஸ்கின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் பிசாசு 2 திரைப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்படும் என கூறப்படுகிறது.