96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"பொட்டு அம்மன் படத்தில் நடித்த மந்திரவாதி வில்லன் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?!"
2000ம் ஆண்டு வெளிவந்த பக்தி திரைப்படம் "பொட்டு அம்மன்". மங்களா ப்ராடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தை கே. ராஜரத்தினம் இயக்கியிருந்தார். ஒரே நேரத்தில் இப்படம் தெலுங்கிலும் "துர்கா" என்ற பெயரில் படமாக்கப்பட்டு வெளியானது.
இப்படத்தில் ரோஜா, கே. ஆர். விஜயா, சுவலட்சுமி, மணிவண்ணன், சுரேஷ் கிருஷ்ணா, தியாகு, குள்ளமணி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் "பொட்டு அம்மன்" படத்தின் கதை.
இப்படத்தில் குழந்தையைக் கடத்திச் செல்ல ஊருக்குள் நுழையும் தீய சக்தியாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்தளவுக்கு தனது மிரட்டும் நடிப்பால் கண்களை உருட்டி அனைவரையும் தூங்க விடாமல் செய்திருப்பார்.
இந்நிலையில், பொட்டு அம்மன் படம் வெளியாகி 22 ஆண்டுகளுக்குப் பின்னர் வில்லனாக நடித்த நடிகரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. "இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரே! இவரா அந்த கொடூர வில்லன்!" என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.