#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகரின் மனைவி கடத்தல்! அதிர்ச்சியில் திரை உலகம்!
லத்திகா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார் சீனிவாசன். சினிமா துறையில் ஒருபக்கம் இவரது புகழ் அதிகரித்தாலும், மோசடி புகார்கள் இவர் மீது அதிகரித்துக்கொண்டே சென்றது.
இந்நிலையில் தனது கணவனை காணவில்லை என்று பவர் ஸ்டார் மனைவி ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் அவரை தொடர்புகொண்ட போது, ஒரு நிலத்தை விற்க நான் ஊட்டி வந்துள்ளதாகவும், நான் விரைவில் சென்னை வந்துவிடுவேன் என பவர் ஸ்டார் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது மனைவியை 11 பேர் கொண்ட கும்பல் கடத்தி சிறை வைத்துள்ளதாக பவர் ஸ்டார் சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவனும், மனைவியும் மாறி மாறி கடத்தல் புகார் தெரிவித்துள்ளனர்.