மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவழியாக இருமாதங்களுக்கு பிறகு, பாலைவனத்திலிருந்து நாடு திரும்பிய நடிகர் பிரித்விராஜ்! மகிழ்ச்சியில் குடும்பத்தார்கள்!
தமிழ் சினிமாவில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் பிருத்விராஜ். இவர் ஏராளமான மலையாள சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இந்நிலையில் பிரித்விராஜ் தற்போது ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜோர்டானில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில் பிருத்விராஜ் உட்பட 57 பேர் கொண்ட குழு ஜோர்டான் பகுதிக்கு சென்றநிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விமானங்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அங்கு நல்ல உணவின்றி தவித்து வருவதாக அவர் உருக்கமான பதிவுகளை வெளியிட்ட நிலையில் அவரை மீட்க கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பியுள்ளனர். பின்னர் அங்கிருந்து கொச்சி வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் கேரள சுகாதாரத் துறை 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளது.