சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
"தோழியின் திருமணத்தில் ஆட்டம் போடும் பிரியா பவானி ஷங்கர்!"

செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கிய பிரியா பவானி ஷங்கர், "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியது.
2017ஆம் ஆண்டு "மேயாத மான்" திரைப்படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மனப் பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதியாட்டம், திருச்சிற்றம்பலம், பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், அடிக்கடி பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் தற்போது பிரியா பவானி ஷங்கர் தனது தோழியின் திருமணத்திற்கு சென்ற புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
கடலோரத்தில் நடந்த அந்தத் திருமணத்தில் பிரியா பவானி ஷங்கர் தனது நண்பர்களுடனும், காதலர் ராஜ்வேலுடனும் பல புகைப்படங்கள் எடுத்து, நடனம் ஆடியும் உள்ளார். அதில் பச்சை நிறப் புடவையில் மல்லிகைப்பூ வைத்து பார்க்க அழகாக உள்ளார் பிரியா பவானி ஷங்கர்.