மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா.. என்ன ஒரு தெளிவு! நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்ட அட்டகாசமான ட்வீட்
வளர்ந்து வரும் தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பிரியா பவானி சங்கர். குறிப்பிட்ட கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவரும் பிரியா நடிப்பில் மட்டுமல்லாது தனது ரசிகர்கள் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் கூட வாய் திறக்காத மாணவி ஸ்ரீமதியின் பிரச்சினைக்கு நீதி கிடைக்க வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது சமூக வலைத்தளத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று பகிரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கண்டு அவர்கள் மட்டும் சந்தோஷமாக இருக்கிறார்கள் நம்மால் இருக்க முடியவில்லையே என்று கவலை கொள்ளும் பலருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் பிரியா.
அந்தப் பதிவில் “மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிய கற்பனையான பார்வையை சமூக ஊடகங்கள் உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் பார்ப்பது நல்ல பக்கம்தான். விருந்து, பயணம், "வெற்றி". ஆனால் மற்ற எல்லா வலிகளும் படம் பிடிக்கப்படாமல் இருக்கின்றன. இந்த படங்கள் மூலம் , எல்லோரும் சந்தோசமாக வாழ்கிறார்கள் நாம் மட்டும் மிகவும் பின்தங்கியிருப்பதாக நினைத்து யாரும் ஏமாற வேண்டாம். அனைத்து புகைப்படங்களுக்கு பின்னால் தான் அவர்களுடைய நிஜ வாழ்க்கை ஒழிந்திருக்கிறது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
#live😊 pic.twitter.com/L7nF2n1ebG
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 20, 2022