மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நானியுடன் 2வது முறையாக ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் தமிழில் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்திலும், தெலுங்கில் பவன் கல்யாண் உடன் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நானியின் 31 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
அதன்படி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நானே மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.