மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பர்! சிம்பு படத்தில் இணைந்த குக் வித் கோமாளி! அதுவும் யாருனு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து சிம்பு கைவசம் தற்போது ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இதற்கிடையில் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் புகழ் சிம்புவுடன் இணைந்து மாநாடு படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால் மாநாடு படத்தில் புகழ் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.