மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதி கட்டத்தை எட்டிய புஷ்பா படப்பிடிப்பு.. வெளியான ரிலீஸ் அப்டேட்!
புஷ்பா
கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் ரெட்டி, பகத் பாசில் உட்பட பலர் நடித்து உருவாகி வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை மையமாக வைத்து வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஒத்திவைக்கப்பட்ட புஷ்பா 2
இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து திரும்புமுனையுடன் நிறைவு செய்யப்பட்ட முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் தயாரிக்கப்பட்டு வந்ததது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கியமான காட்சிகளை படக்குழுவினர் இன்னும் படமாக்கப்படாததால் டிசம்பர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு பலி விவகாரம்; ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!
புஷ்பா 2 இறுதிகட்ட படப்பிடிப்பு
இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் இறுதிகட்ட காட்சிகள் பிரம்மாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கலான் படத்தில் பெண்களுக்கு நேர்ந்த அவலம்.. உண்மையை உடைத்த நடிகை!