#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏன்பா இப்படி.! திருப்பதியில் செல்பி எடுக்க வந்த ரசிகர்! பாகுபலி நடிகர் செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரல் வீடியோ!!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடந்துவந்த நடிகர் ராணாவுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை அவர் பிடிங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் ராணா. தமிழில் இவரது நடிப்பில் தமிழில் வெளிவந்த ஆரம்பம், பெங்களூர் நாட்கள் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிரம்மாண்டமாக வெளிவந்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகளவில் பெருமளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் ராணா அண்மையில் தனது குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு அவர் வெளியே நடந்து வந்தபோது அவருக்கு முன்னே சென்று ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
While fans taking selfie ..Actor rana tried to snatch fan's cell phone .#India #Ranadaggubati #Tirupati pic.twitter.com/LAQaKinKyv
— Backchod Indian (@IndianBackchod) September 15, 2022
அப்பொழுது கோபமடைந்த ராணா ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டு அவரை செல்பி எடுக்க விடாமல் சிறிது நேரம் அலைகழித்து விட்டு பின்பு சிரித்துக்கொண்டே போனை திருப்பி கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.