மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் புகைப்படங்கள்!
பிரபல நடிகை ரகுல் பீரித் சிங் தனது காதலரும், நடிகருமான ஜக்கி பக்னானியைத் திருமணம் செய்து கொண்டார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
தமிழில் தற்போது இவர் இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிய நிலையில், நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரகுல் பீரித் சிங் தனது நீண்ட கால காதலரும், நடிகருமான ஜக்கி பக்னானியைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.