மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. இவ்ளோ பயமா! குழந்தை போல அழுத நடிகை ராய் லட்சுமி! அதுவும் ஏன்னு பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்த் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகாத அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் அவர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா, நீயா 2 என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்து அவர் சவுகார்பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது அவர் சிண்ட்ரல்லா எனும் படத்தில் துளசி என்ற ஏழை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி வரும் நிலையில் பலரும் அதிலிருந்து தப்ப தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராய் லட்சுமியும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஊசி போட மிகவும் பயந்து குழந்தை போல அழுதுள்ளார். அந்த வீடியோ வைரலாகிறது.