திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது! அடையாளமே தெரியாமல் செம மாடர்னாக மாறிட்டாரே! வாயை பிளந்த ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். தாங்களே சொந்தமாக பாடல் எழுதி, அதனை பாடிவரும் இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
மேலும் இந்த சீசனில் செந்தில் கணேஷ் வெற்றியாளரானதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏராளமான படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் ஜோடியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி மாடர்ன் டிரஸ் மற்றும் கூலிங்கிளாஸ் என செம ஸ்டைலாக கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.