மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த நடிகையா.? வேண்டவே வேண்டாம்." கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஜினி, கமல்.!
ஒரு காலத்தில், தமிழ் சினிமாவில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலமாக, நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தவர் தான் சிவாஜி கணேசன். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகைகளோடு கதாநாயகனாக நடித்திருந்தாலும், நடிகை அம்பிகா சிவாஜியோடு, கதாநாயகியாக நடிப்பதற்கு ரஜினி, கமல் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக தற்சமயம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1984 ஆம் வருடம் வெளியான வாழ்க்கை திரைப்படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில், மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் நடிகர் சிவாஜி கணேசன். இந்த திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடிகை அம்பிகா நடித்திருந்தார்.
இந்த திரைப்பட அனுபவம் தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், "திரைப்படத்திற்கு முன்னதாக சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக சுஜாதா, கே.ஆர். விஜயா போன்றோர் தான் நடித்தனர். ஆனாலும், இதனை மாற்றி காட்ட வேண்டும் என்பதற்காக நடிகை அம்பிகாவிடம் பேசினேன். அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் இதற்கு தமிழ் சினிமா துறையில் பலர் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள். மேலும் நடிகை அம்பிகா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்க மாட்டார் என்றும் கூறினர். அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த கமல்ஹாசன், இந்த விவகாரம் குறித்து நீங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கினார்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த் நீங்கள் விஷ பரிட்சையை மேற்கொள்கிறீர்கள் என்று கூறினார். ஆனாலும் நான் என்னுடைய முடிவில் மிகவும் தீர்க்கமாக இருந்தேன். நான் நினைத்தபடியே அந்த திரைப்படத்தை எடுத்தேன். திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று, எனக்கு வெற்றியை பரிசாக தந்தது." என்று கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன்.