மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிகுந்த வேதனையுடன் நடிகர் ரஜினி வெளியிட்ட அதிரடி அறிக்கை! எதிர்பாராத முடிவால் பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
நடிகர் ரஜினி டிசம்பர் 31 புதிய கட்சியை குறித்து அறிவிப்பு வெளியிடுவார், 2021 அரசியல் கட்சியை தொடங்குவார் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
மேலும் நடிகர் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்ட நிலையில், ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நலமடைந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு நல்ல ஓய்வு வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ரஜினியின் புதுகட்சி பெயர், சின்னம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தனது உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.