பிரமாண்ட கூட்டணியில் இணையும் ரஜினி! அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா?



rajini nex movie with gowtham menon

 பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் நடிப்பில்  AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இதன் பட பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும், படத்தின் இசை வெளியீட்டுவிழா அடுத்த மாதம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

rajini

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர்168 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அப்படத்தையும் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி LKG, கோமாளி உள்ளிட்ட படங்களை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.