மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் பார்த்திபனுக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய சூப்பர் ஸ்டார் ரஜினி! ஏன்? என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம்.'இரவின் நிழல்'. இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரவின் நிழல் படத்தில் பிரிகிடா, வரலட்சுமி, ரேகா ஐயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படம் என்பதால் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த நிலையில் இரவின் நிழல் பட குழுவை பாராட்டி நடிகர் ரஜினி தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே சாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும் அனைத்து பட குழுவினருக்கும் மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்டர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என கூறியுள்ளார்.