மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாப்பா ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு..! இளைஞர்களை கவர்ந்த ராஷ்மிக்காவின் அழகான கியூட் வீடியோ..!
தனது அழகான பேச்சாலும், சிரிப்பாலும் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா உலகில் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், யஜமான போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு ரஷ்மிகா பேட்டி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களான முகநூல், டிக் டாக் போன்றவற்றில் வைரலாகிவருகிறது. பாப்பா ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு, ரொம்ப நல்ல பொண்ணு என தனது அழகான எக்ஸ்பிரஷன் உடன் இவர் பேசியுள்ள வீடியோ பலரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆடியோவை வைத்து பலரும் டிக் டாக் செய்து பிரபலமாகிவருகின்றனர். இதோ அந்த வீடியோ.