மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.! பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 90 நாட்களை கடந்துள்ள நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதில் குறைந்த வாக்குகளைப் பெற்று ரவீனா மற்றும் நிக்சன் ஆகியோர் வெளியேறினர்.
ரவீனா திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌனராகம் 2 நிகழ்ச்சியில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது குழந்தைத்தனமான செயலால் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது எலிமினேட் ஆகியுள்ள ரவீனா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது ரவீனா ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 90 நாளைக்கு ஏறக்குறைய 16 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.