மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ...இதுக்காகத்தான் அனுஷ்கா இப்படி ஆகிட்டாரா ., ஷாக்கில் வாயடைத்து போன ரசிகர்கள் .!
பாரதிராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலரும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் விஜய், பிரியதர்ஷன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பாரதிராஜா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கும் வேலைகளை விறுவிறுப்பாக தொடங்கிவிட்டதாகவும், பாரதிராஜாவுக்கு உறுதுணையாக இயக்குனர்கள் அமீரும், வெற்றிமாறனும் பணியாற்ற இருப்பதாகவும் . கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் சமீபத்தில் உடல் எடை கூடிய நிலையில் அனுஷ்காவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
ஆனால், தற்போது ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் தான் அவர் உடல் எடையை அதிகப்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.